பெரியப்பா நகரில் வசதியில்லாதது, சரியாப்பா| Dinamalar

பெரியப்பா நகரில் வசதியில்லாதது, சரியாப்பா

Added : ஜூன் 25, 2020
Share
 பெரியப்பா நகரில் வசதியில்லாதது, சரியாப்பா

பழநி:பழநி பெரியப்பா நகரில் தேங்கும் கழிவுநீர், குப்பைகிடங்கில் எற்படும் புகையால் அப்பகுதியினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரியப்பா நகர் 7,8,9 வது தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாய் அள்ளப்படாமல் உள்ளது. அதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எட்டாவது தெரு உப்புத் தண்ணீர் தொட்டியில் சிலமாதங்களாக தண்ணீர் நிரப்பாததால் அருகில் உள்ள தெருவில் சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வார்டுக்குள் உள்ள குப்பை கிடங்கில் எந்நேரமும் தீப்பற்றி எரிகிறது. இதனால் எழும் புகையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

குழந்தைகள், வயதானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.

வடிகால் வசதியில்லை

மணிமேகலை: எங்கள் பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி விடுகிறது. இதில் புழுக்கள், கொசுக்கள் அதிகமாக உள்ளது. சாக்கடை கழிவுகளை அகற்றினால் கழிவு நீர் வெளியேறும். கொசுமருந்தும் அடிப்பது இல்லை'' என்றார்.

சுகாதாரக்கேடு

அம்மாபட்டி: உப்புத் தண்ணீர் நிரம்பும் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதில்லை. பக்கத்து வீதிக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டி உள்ளது. குடிநீர் வினியோகமும் சரிவர இல்லை. துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்ய வருவது இல்லை. குப்பைக் கிடங்கில் இருந்து எந்நேரமும் புகை வருவதால் சுவாச நோய்பரவும் அச்சத்தில் உள்ளோம். புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை'' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X