சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலக்காய்கள் திருட்டு தவிப்பில் விவசாயிகள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கம்பம்:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப் படுகிறது. தோட்டங்கள்பெரும்பாலானவை கம்பம் சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்களிடம் உள்ளன. இவர்களில் 2 ஏக்கர் முதல் 5 ஏக்கருக்குள் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு கட்டட வசதி இருக்காது.

தினமும் சென்று வேலை செய்து திரும்புவர். இவர்கள் தான் அதிக மகசூல் எடுப்பர். பெரிய விவசாயிகளின் தோட்டங்களில் ஆட்கள் நிரந்தரமாக குடியிருப்பதால் பாதுகாப்பு இருக்கும். ஆனால் இவர்களின் தோட்டங்களில் அந்நிலை இல்லை. கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களாக சிறு விவசாயிகளால் தோட்டங்களுக்கு செல்ல முடியவில்லை. அவர்களின் தோட்டங்களில் ஏலக்காய்களை சமூக விரோத கும்பல் பறித்து செல்கிறது. இதனால் அவர்கள் பரிதவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X