சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கும் பலாப்பழம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கும் பலாப்பழம்

Added : ஜூன் 25, 2020
Share
 சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கும்  பலாப்பழம்

கொடைக்கானல்:கொடைக்கானல் மலைப்பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கியும், சுற்றுலா பயணிகள் இல்லாமல் வியாபாரம் களைகட்டாமல் உள்ளது.
ஆண்டு தோறும் மே மாதம் பலா சீசன் துவங்கி ஜூலையில் நிறைவடையும். தாண்டிக்குடி, தடியன்குடிசை வட்டார பகுதியில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்கள் பெருக்காமல் மகசூல் பாதித்துள்ளது.வழக்கமாக, கொடைக்கானல் மெயின் ரோட்டில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சீசனில் ஆங்காங்கே கடைகள் அமைப்பர். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கொடைக்கானலே வெறிச்சோடிவிட்டது.

இந்நிலையிலும் பலா பழங்கள் ரோட்டில் அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரு பழம் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. வியாபாரி ஒருவர் கூறுகையில், ''சீசன் நேரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வாங்கிச் செல்வர். அவர்கள் வராததால் பழங்கள் வீணாகிறது. அதிக லாபம் இன்றி பிழைப்பு நடந்தால் போதும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X