பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்....திண்டுக்கல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

தக்காளி விலை அதிகரிப்பு

ஒட்டன்சத்திரம்: சாலைப்புதுார், பாவாயூர், அம்பிளிக்கை பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிடப்படுகிறது. கடந்த மாதம் வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளி கிலோ ரூ.6 க்கு விற்றது. இந்நிலையில் அறுவடை குறைந்ததால் சில நாட்களாக வரத்து குறைந்திருந்தது. அப்போதிருந்தே விலை ஏறுமுகமாகி கிலோ ரூ.10 க்கு மேல் விற்றது. நேற்று வரத்து மிகவும் குறைந்ததால் ரூ.29க்கு விற்பனையானது.

தார் ரோடு அமைக்க வலியுறுத்தல்

கள்ளிமந்தையம்: அப்பியம்பட்டி விவசாய தோட்டங்களில் இருந்து மூலனுார் -பழநி ரோட்டை அடைய ஒரு கி.மீ., நீளத்திற்கு மண் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் கு விளைபொருட்களை மார்க்கெட் கொண்டு செல்ல சிரமமாக உள்ளது. இது குறித்து கடந்த ஆண்டு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். இதுவரை ரோடு அமைக்கவில்லை. இதனால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நிர்வாகிகள் தேர்வு

வடமதுரை: தென்னம்பட்டி சவடம்மன் கோயில் மகாசபை கூட்டத்தில் 2020 - 2023 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ஆண்டவர், செயலாளராக வேலு, பொருளாளராக காளிமுத்து, துணைத்தலைவர்களாக செந்தில்குமார், போசப்பன், துணைச் செயலாளர்களாக ராஜேந்திரன், சுப்பையன் மற்றும் 65 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.

322 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்: வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து பலர் இ -பாஸ் இல்லாமல் குறுக்கு வழிகளிலும், போலி பாஸ்கள் மூலமும் திண்டுக்கல் வருகின்றனர். இதனால் எஸ்.பி., சக்திவேல் உத்தரவின்படி மாவட்ட எல்லைகளில் சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டன. கடந்த 10 நாட்களில் இ- பாஸ் இன்றி வந்த 171 இருசக்கரம், 6 மூன்று சக்கரம், 145 நான்கு சக்கர வாகனங்கள் என 322 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 283 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மலைநகரில் சாரல்

கொடைக்கானல்: மலைப்பகுதியில் சில மாதங்களாக வறண்ட வானிலையும், சுட்டெரிக்கும் வெயிலும் நீடித்தது. எதிர்பார்த்த மழையின்றி, விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் பெய்யத் தொடங்கிய சாரல் ஒரு மணிநேரம் நீடித்தது. சாரல் மழையால் மலைநகர் குளிர்ந்தது.

ஜூன் 29 ல் தபால் குறைதீர் முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் ஜூன் 29 மாலை 3:00 மணிக்கு குறைதீர் முகாம் நடக்க உள்ளது.கொரோனா காரணமாக தங்கள் குறைகளை தபாலில் 'அஞ்சல் குறைதீர் முகாம்' என்று கவரின் மேல்பகுதியில் எழுதி அனுப்ப வேண்டும். பிரச்னைக்கான தீர்வுகளும் தபாலில் அனுப்பப்படும், என, முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.

கடை திறப்பு நேரம் குறைப்பு

அய்யலுார்: வடமதுரை ஒன்றியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் வர்த்தக நேரத்தை குறைத்துள்ளனர். கொல்லப்பட்டியில் மக்களே கடைகளை அடைத்துள்ளனர். அதேபோல அய்யலுார் வியாபாரிகளும் காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை என கடை திறப்பு நேரத்தை குறைத்துள்ளனர். சங்க தலைவர் பூமிராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுத்து அமல் செய்துள்ளனர்.

யோகா தினம்

நத்தம்: அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம் டாக்டர் முரளிதரன் தலைமையில் டாக்டர்கள் பூமா, இந்திர ராஜகுமாரி முன்னிலையில் நடந்தது. இயற்கை மருத்துவர்
வசந்தகுமார் பயிற்சி வழங்கினார். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு யோகா பயிற்சி, இயற்கை உணவுகள், நோய் எதிர்ப்பு சக்தி பொடி வழங்கப்பட்டது. தலைமை செவிலியர் ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X