பொது செய்தி

தமிழ்நாடு

தலைவர் அறைக்கு 'ஏசி' வசதி அவசியமா:ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

தேனி:கொரோனா காலத்தில் தேனி ஒன்றிய தலைவர் அறையில் 'ஏசி' வசதி செய்ததற்கு அ.தி.மு.க., கவுன்சிலர் சங்கீதா எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

தேனி ஒன்றிய கூட்டம் தலைவர் சக்கரவர்த்தி (தி.மு.க.) தலைமையில் நடந்தது. துணை தலைவர் முருகன்(காங்.,), ஆணையாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய வளர்ச்சி பணிகளை கவுன்சிலர்களுக்கு முறையாக தெரியப்படுத்துங்கள். ஊராட்சி நிகழ்சிகளுக்கு கூட கவுன்சிலர்களை அழைப்பது இல்லை.

பல லட்சம் ரூபாய் செலவில் பொருட்கள் வாங்கியதாக தீர்மானம் வருகிறது. கொரோனாவால் கூட்டம் நடத்தவில்லை என்றால் தலைவர் அறையில் கவுன்சிலர்களை அழைத்து ஆலோசிக்கலாம். ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் பணிகள் சுமூகமாக நடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுங்கள் என கவுன்சிலர் பிரகாஷ் வலியுறுத்தினார்.

'ஏசி' பயன்படுத்தினால் கொரோனா பரவும் என்கின்றனர். இச் சூழலில் தலைவர் அறையில் ரூ.50 ஆயிரம் செலவில் 'ஏசி' வசதி அவசியமா. ஒருசில மணிநேரம் வந்து செல்லும் அலுவலகத்திற்கு ஆடம்பர வசதி ஏன். ஒன்றிய அலுவலகத்தில் எம்.எல்.ஏ.விற்கு அறை ஒதுக்குங்கள் என கவுன்சிலர் சங்கீதா தெரிவித்தார்.

கொரோனாவிற்கு முன் 'ஏசி' வசதி செய்தது. இதற்கு அனுமதி உள்ளது. வீண் செலவு இல்லை என துணைத்தலைவர் விளக்கமளித்தார்.ஊராட்சி நிகழ்ச்சிகளை கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் கூறினார். ஊராட்சிகளில் கிருமிநாசினி உள்ளிட்ட தெளிப்பு உள்ளிட்ட 78 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X