பொது செய்தி

தமிழ்நாடு

2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி: தினமலர் ஏற்படுத்திய விழிப்புணர்வு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி: தினமலர் ஏற்படுத்திய விழிப்புணர்வு

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டத்தை பசுமை மாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், விழுதுகள் அமைப்பு, பல தன்னார்வ அமைப்புகள், வெற்றிதுளிகள், கே.வி.கே., திருப்பணிக்குழு, பின்னக்கில் அமைப்பு, எச்.டி.எப்.சி., வங்கி இணைந்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் வகையில் நர்சரி ஒன்றை ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் துவங்கியுள்ளது.

சப்கலெக்டர் உமா பணியை துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். தாசில்தார் சரவணன், துணை தாசில்தார்கள் ராஜேந்திரன், ஜெகதீஸ்வரன், சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் லட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜமுருகன், அலுவலர் கயல்விழி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஆண்டு 2 லட்சம் மரக்கன்று உற்பத்தி செய்து, அரிய வகையான சாம்பிராணி, சொர்க்க மரம், ருத்ராட்சம், கடம்பம், நீர்மருது என, 100 வகை மரங்கள் நடப்பட உள்ளது.

விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி கூறியதாவது:நீர்நிலைகளை காக்க கடந்தாண்டு தினமலர் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, தமிழ் நாட்டில் பல இடங்களில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டன. அதுபோல் மரக்கன்றுகளை நமக்கு நாமே உற்பத்தி செய்தால் ஒரே ஆண்டில் பல கோடி மரங்களை நடவு செய்யலாம். இதில் எங்களோடு திண்டி மா வனம், தோட்டக்கலை துறை இணைத்து ஆலோசனை வழங்குகிறது. இதனை மாணவர்களை இணைத்து, ஒரு சமுதாய இயக்கமாக மாற்ற முயற்சிக்கிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X