தொற்றாளரை தேடுது சுகாதாரத்துறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்றாளரை தேடுது சுகாதாரத்துறை

Added : ஜூன் 25, 2020
Share
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டில் மூன்று நாட்களாக கொரோனா 'பாஸிட்டிவ்' நபரை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருந்து சுகாதார துறையினருக்கு, 29 வயது கார் டிரைவருக்கு கொரோனா 'பாசிடிவ்' என தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட முகவரியில் வேறு ஒருவர் இருந்தார். அதே பெயர் கொண்ட நபர்கள் மற்றொரு தெருவில் வசிப்பதாக தெரிந்தது. அங்கு

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டில் மூன்று நாட்களாக கொரோனா 'பாஸிட்டிவ்' நபரை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருந்து சுகாதார துறையினருக்கு, 29 வயது கார் டிரைவருக்கு கொரோனா 'பாசிடிவ்' என தகவல் கிடைத்தது.

குறிப்பிட்ட முகவரியில் வேறு ஒருவர் இருந்தார். அதே பெயர் கொண்ட நபர்கள் மற்றொரு தெருவில் வசிப்பதாக தெரிந்தது. அங்கு சென்றபோது அவர் வெளியூர் செல்லவில்லை என்றும் எந்த பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை என்றும் கூறினார். குழப்பமடைந்த சுகாதாரத் துறையினர் தற்போது கணவாய்ப்பட்டி பகுதியில் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X