பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் பரிசோதனை தீவிரம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

குமுளி:தேனி மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பதன் எதிரொலியாக தமிழக எல்லையான குமுளியில்கேரள சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இ பாஸ்' பெற்றவர்கள் மட்டுமே எல்லைப்பகுதியை கடந்து செல்ல முடியும். அதுவும் கேரளாவில் தற்போது பாஸ் வழங்குவதில் கெடுபிடியைக் காட்டி வருவதால் அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் குமுளி வழியாக கேரளா வருபவர்களை தீவிர கண்காணிப்பு செய்ய கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் கேரளா வரும் அனைவருக்கும் குமுளி பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்ட வார்டில் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் கண்டறியப்படுவதுடன் சளிபரிசோதனை எடுக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவமனை சிகிச்சைக்கும், இல்லையெனில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X