பொது செய்தி

இந்தியா

சோனியா, ராகுலிடம் என்.ஐ.ஏ., விசாரணை கோரி மனு தாக்கல்

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
nia probe, rahul gandhi, sonia gandhi, congress china mou

புதுடில்லி, :'சீன கம்யூனிஸ்ட் கட்சி யுடன், காங்கிஸ் கட்சி, 2008ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக, காங்., தலைவர், சோனியா, எம்.பி., ராகுல் ஆகியோரிடம், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும்' என கோரி, உச்ச நீதி
மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.மு., கூட்டணிவழக்கறிஞர் ஷஷாங் சேகர் ஜா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சீனாவுடன், இந்தியாவுக்கு எப்போதுமே சிறப்பான உறவு இருந்தது இல்லை.அப்படியிருந்தும், 2008ல், மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சி நடந்த போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால், அதில் கூறப்பட்டுள்ள விபரங்களை, காங்கிரஸ் மறைத்து விட்டது. தகவல் அறியும் உரிமை சட்டம், ஐ.மு., கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.


latest tamil news




ஆனால், தேசிய முக்கியத்துவம் பெற்ற, இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை காங்கிரஸ் மறைத்து விட்டது.இரு நாடுகள் தொடர்பான விவகாரத்தில், இரு கட்சிகளும் இணைந்து செயல்படவும், தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்ட விரோதம்அதனால், இந்த ஒப்பந்தம் பற்றி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், 1967ன் கீழ் விசாரிக்க, என்.ஐ.ஏ., வுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக, காங்., தலைவர் சோனியா, எம்.பி., ராகுலிடமும், என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
25-ஜூன்-202022:34:44 IST Report Abuse
konanki ப சி இதுவரை சீனாவை கண்டிக்கவில்லை. மாறாக மக்களே முன்வந்து சீனப் பொருட்களை நிராகரிப்போம் என்ற போது அது சாத்தியமில்லை. நாம் சீனப பொருட்களை நிராகரிக்க கூடாது என்று பேசினார்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
25-ஜூன்-202019:40:23 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வீரவசனம் பேசினது தெரியுது திருட்டு வேலை செய்தால் என்றோ ஒருநாள் வெளியில் வரத்தானே செய்யும். சிதம்பரம் மிக அறிவார்த்தமான ஊழல் செய்து சம்பாதித்து சொத்து சேர்த்துள்ளது தெரிந்ததால் இப்போ மாட்டிக்கொண்டார் அதுபோல்..இனி சிறைவாசம்தான் பொருளாதாரம் அங்கே செயல்படும்.
Rate this:
Cancel
N Sankar - Tirunelveli,இந்தியா
25-ஜூன்-202018:18:28 IST Report Abuse
N Sankar இவர்களுக்கு 2Gயில் பங்கு இருக்காதா? ஒன்றும் இல்லாத மருமகனே ஆட்டம் போட்ட நிலை. போசுவதெல்லாம் உத்தமர்கள் போன்று. மகள் கொடுக்கும் வீட்டு வாடகை ரூபாய் 700 மட்டும். மனசாட்சி இல்லாதவர்கள். ப சி யும் இவர்களுக்கு ஒரு கூட்டாளி. ஒரு தலைவர் சொன்னது போல "ஆண்டவனாலும் இந்த நாட்டை காப்பாற்றமுடியாது" .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X