பொது செய்தி

தமிழ்நாடு

'கோவிட் கேர் சென்டர்' பணி விறுவிறுப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கூடலுார்:தேனி மாவட்டத்தில் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப் பட்டவர்கள் தற்போது தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, கம்பம் அரசு மருத்துவமனை, ஓடைப்பட்டி கோவிட் கேர் சென்டரிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே கூடலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் கேர் சென்டர்' அமைக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. படுக்கை வசதிகள், டாக்டர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்குவதற்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. தொற்று உள்ளவர்களுக்கு கழிப்பறை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டபின் கேர் சென்டர் பயன்பாட்டிற்கு வரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X