விவசாயிகளிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வனத்துறை அதிகாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வனத்துறை அதிகாரி கைது

Added : ஜூன் 25, 2020
Share

மூணாறு:கேரளா, மூணாறு அருகே ஏலத்தோட்டத்தில் மரக்கிளைகளை முறிக்க விவசாயிகளிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேவிகுளம்வனத்துறை அதிகாரி ஷினிலை 50, போலீசார் கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறையில் 50 ஏக்கர் குத்தகை நிலத்தில் இரண்டு விவசாயிகள் ஏலம் சாகுபடி செய்து வருகின்றனர்.ஏலத்தோட்டத்தில் உள்ள மரங்களில் கிளைகளை முறிக்க வனத்துறையினரின் அனுமதி வேண்டும் என்பதால், தேவிகுளம் வனத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.தோட்டத்தை பார்வையிட்ட வனத்துறை அதிகாரி ஷினில் , மரக்கிளைகளை முறிக்க அனுமதி தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

அதுகுறித்து விவசாயிகள் தொடுபுழா லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர்.நேற்று தேவிகுளம் வனத்துறை அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள், ஷினிலிடம் ரூ.10 ஆயிரத்தைக் கொடுத்தனர். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., ரவிகுமார் தலைமையிலான போலீசார் அப்பணத்தை வாங்கிய அவரை கைது செய்தனர்.-------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X