பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி  பி.டி.ஓ., பணியிட மாற்றம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

வேடசந்துார்:வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தின் வட்டார வளர்ச்சி (பி.டி.ஓ.,) அலுவலராக இருந்தவர் விஜயலட்சுமி. கடந்த ஜூன் 20ல், சின்னாளபட்டியை சேர்ந்த இவரது உறவினர் ஒருவர் குடும்பத்துடன் வேடசந்துார் வந்தார்.

உடல் நிலை பாதிப்புடன் வந்த அந்த ஆண் மற்றும் அவரது மகன் தண்ணீர் பந்தம்பட்டியில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையத்திற்கு சென்றுவிட்டனர்.மற்றொரு மகன், அவரது மனைவி, அவரது அப்பா ஆகிய மூன்று பேர், ஒன்றிய அலுவலகத்தில் தங்கியிருந்துவிட்டு, மறுநாள் காலையில் பாதுகாப்பு மையத்திற்கு சென்றனர்.

திங்களன்று அலுவலகம் திறந்தபோது கொரோனா பிரச்னை கிளம்பியது. இதையடுத்து அலுவலகம் முழுவதும் கழுவி, வேப்பிலை, மஞ்சள், வேப்பிலை தெளிக்கப்பட்டது. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.இதை தொடர்ந்து, ஒன்றிய அலுவலகத்தில் இரவில், வெளியாட்களை தங்கவைத்த பி.டி.ஓ., விஜயலட்சுமி, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றிய திருமலைசாமி, வேடசந்துார் வட்டார வளர்ச்சி அலவலராக மாற்றப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X