திருமண நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடு மீறல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமண நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடு மீறல்

Added : ஜூன் 25, 2020
Share

கடலுார் : கடலுாரில் நடந்த திருமணங்களில் கட்டுப்பாடுகளை மீறி அதிக கூட்டம் கூடியதாக, மூன்று மண்டபங்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் நேற்று காலை அதிக கூட்டத்துடன் திருமணங்கள் நடப்பதாகவும், இதனால் கொரோனா பரவலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.இதையடுத்து, கடலுார் தாசில்தார் செல்வகுமார் தலைமையிலான அதிகாரிகள் திருவந்திபுரம் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, 3 திருமண மண்பங்களில் கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் அதிகமாக கூடியிருந்தனர். இதனால் கடுப்பான தாசில்தார், மூன்று திருமண மண்டப உரிமையாளர்களை அழைத்து எச்சரித்ததுடன், நோட்டீசும் வழங்க உத்தரவிட்டார்.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தினசரி அதிகரித்து, ஆயிரத்தை நெருங்கும் நிலையில், அதிக கூட்டம் சேர்த்து, திருமணம் நடத்தினால் எளிதில் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சமூக இடைவெளியின்றி திருமணம் நடத்துவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X