சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் கடையடைப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கடலுார் : வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, கடலுார் மாவட்டத்தில் நேற்று கடையடைப்பு நடத்தப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கி, சிறையில் அடைத்தனர். உடல் நிலை பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.இச்சம்பவத்தை கண்டித்து, மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்த தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்தது.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குறிப்பிட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

கடலுார் மஞ்சக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன. திருப்பாதிரிப்புலியூரில் நகைக்கடைகள் பகல் 1:30 வரையில் மூடப்பட்டன.மாவட்டத்தில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைதான் இருந்தது.குறிப்பாக மொபைல் போன் கடைகள் தான் அதிகம் மூடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X