அனந்தபுரத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனந்தபுரத்தில் சிறந்த விவசாயிகளுக்கு விருது

Added : ஜூன் 25, 2020
Share

செஞ்சி : அனந்தபுரத்தில் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் சிறந்த விவசாயிகளுக்கு விருது வழங்கினர்.

அனந்தபுரம் ரோட்டாரி சமுதாய குழுமம் சார்பில் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. ரோட்டாரி சமுதாய குழும தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கலையரசு முன்னிலை வகித்தார். விழுப்புரம் ரோட்டரி சங்க தலைவர் பாலகுருநாதன், முன்னாள் துணை ஆளுநர் சரவணகுமார் ஆகியோர் சிறந்த 18 விவசாயிகளுக்கு விருது வழங்கினர். ஏழை மாணவிகளுக்கு நலதிட்ட உதவியும், பள்ளி நுாலகத்திற்கு புத்தகங்களும் வழங்கினர்.

செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன், ரோட்டாரி சமுதாய குழும பொருளாளர் அலீல், துணை தலைவர் மதிவாணன், துணை செயலாளர் மோகன், ரமேஷ், சுந்தரமூர்த்தி, ஷாஜகான், நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X