சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயிற்று வலியால் 2 பேர் தற்கொலை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

குறிஞ்சிப்பாடி : வயிற்று வலியால் பூச்சிமருந்து குடித்து இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

குள்ளஞ்சாவடியை அடுத்த, கட்டியான்குப்பம், ரோட்டு தெருவை சேர்ந்தவர், ஆறுமுகம் மகன், கிருஷ்ணமூர்த்தி, 31. இவர் வயிற்று வலி காரணமாக, நேற்று முன்தினம், வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.மற்றொரு சம்பவம்குள்ளஞ்சாவடியை அடுத்த, கட்டியான்குப்பம், நடுத்தெருவை சேர்ந்தவர், ராமலிங்கம் மனைவி, விஜயகுமாரி, 45. இவர் நேற்று முன்தினம் வயிற்று வலி காரணமாக வீட்டில் இருந்த பால்டாயில் மருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இறந்தார்.குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X