சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் பல் மருத்துவர் அவரது மனைவிக்கு கொரோனா நோய் தொற்று

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

செஞ்சி : செஞ்சியில் பல் மருத்துவர், அவரது மனைவிக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

செஞ்சி, திருவண்ணாமலை ரோட்டில் கிளினிக் நடத்தி வரும் பல் மருத்துவர், அவரது மனைவி என இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இருவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுகாதாரத் துறையினர் அழைத்து சென்றனர். திண்டிவனம் ரோட்டில் அவர் வசித்து வந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி சுகாதார பணியை தீவிர படுத்தி உள்ளனர். நேற்று முன் தினம் செஞ்சியில் சிறுவணிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவரது கடைக்கு சென்ற பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது செஞ்சி நகர மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X