அரசு உத்தரவை மீறி திருமணம்மண்டப உரிமையாளர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு உத்தரவை மீறி திருமணம்மண்டப உரிமையாளர் கைது

Added : ஜூன் 25, 2020
Share

விழுப்புரம் : அரசு உத்தரவை மீறி திருமணம் நடத்த அனுமதி அளித்த மண்டப உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த திருவாமாத்துார் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரசின் உத்தரவை மீறி திருமணம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு குருமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.அப்போது, அரசு உத்தரவை மீறி திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி அளித்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, பொதுமக்களை வெளியேற்றிய போலீசார் மண்டபத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியை சேர்ந்த மண்டப உரிமையாளர் ராஜ்குமார், 39; என்பவரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X