அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கவுன்சிலர் பேச்சுக்கு அ.தி.மு.க., எதிர்ப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கடலுார் : நுாலகங்களில் பொருட்கள் மாயமானதாக குற்றம் சாட்டிய தி.மு.க., கவுன்சிலர் பேச்சுக்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றிய குழு கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

கடலூர் ஒன்றிய குழு கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்துது. சேர்மன் பக்கிரி தலைமை தாங்கினார். துணை சேர்மன்அய்யனார் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், கவுன்சிலர் கார்த்திகேயன் பேசுகையில், ஊராட்சிகளில் அமைந்துள்ள நுாலகங்கள் இயங்கவில்லை. கடலுார் ஒன்றிய பகுதிகளில் வைரஸ் பாதிப்பு தொடர்பாக மேற்கொள்ளப் பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் செலவினங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். 15 வது நிதிகுழுவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கூட்டத்தில் எது வேண்டுமானாலும் பேசவேண்டும் என்பதில்லை என, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.கவுன்சிலர் முரளி பேசுகையில், எம். புதுார் கிராமத்தில் திறந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றார். கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தலைவர் பக்கிரி உறுதி அளித்தார்.வாணிஸ்ரீ பேசுகையில், அனைத்து பஞ்சாயத்துகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து, கவுன்சிலர்கள் சுபாஷினி, ஜெயா மற்றும் சம்பத், வேல்முருகன் உள்ளிட்ட பலரும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.கூட்டத்தில், பி.டி.ஒ., கிருஷ்ணமூர்த்தி, குமரன் மற்றும் மேலாளர் வீரமணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X