சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொத்த காய்கறி கடைகள் இடமாற்ற பிரச்னைமாவட்ட நிர்வாகம்- வியாபாரிகளிடையே இழுபறி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மொத்த காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வதில், தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.

விழுப்புரம் நகரில், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க, கடந்த மாதம், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, காய்கறி மார்க்கட் மூடப்பட்டது. பின்னர், தற்காலிக ஏற்பாடாக விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில், உழவர் சந்தையும், பழைய பஸ் நிலையத்தில் சில்லரை காய்கறி கடைகள், புதிய பஸ் நிலையத்தில் மொத்த காய்கறி கடைகள் அமைக்கப் பட்டது. இந்நிலையில், முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நகரில் இயல்பு நிலை திரும்பியது. மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து ஓரளவு இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பழைய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த சில்லரை காய்கறி கடைகள், நகராட்சி பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

மேலும், புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள மொத்த காய்கறி கடைகளை, விழுப்புரம்- திருச்சி சாலையில் அமைந்துள்ள ஜானகிபுரம் பகுதிக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், நகரைவிட்டு நீண்ட தொலைவில் அந்த இடம் உள்ளதாக, மொத்த காய்கறி வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், புதிய பஸ் நிலையத்தில் உள்ள மொத்த காய்கறி கடைகளை இடமாற்றம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை, மொத்த காய்கறி வியாபாரிகள் ஏற்க மறுப்பதால், இப்பிரச்னையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X