பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கான 6.77 லட்சம் கருவிகள் கையிருப்பு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் 6.77 லட்சம் கருவிகள் கையிருப்பில் உள்ளதாக மருத்துவ பணிகள் சேவை கழகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பி.சி.ஆர். கருவி வாயிலாக கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் 46 அரசு மருத்துவமனைகள் 41 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை 10 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தென் கொரியா நிறுவனத்திடம் 15 லட்சம் பி.சி.ஆர். கருவிகளுக்கு தமிழக அரசு 'ஆர்டர்' கொடுத்தது.


latest tamil news



அதில் வாரந்தோறும் 1.5 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் சென்னைக்கு வந்துள்ளன.'தென் கொரியாவில் இருந்து பி.சி.ஆர். கருவிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. தற்போது அரசிடம் 6.77 லட்சம் கருவிகள் உள்ளன' என தமிழக மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜூன்-202007:09:24 IST Report Abuse
தமிழ் பத்திரமா வச்சுக்குங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X