பிரிட்டன் விருது: இந்திய பெண்கள் தேர்வு

Updated : ஜூன் 25, 2020 | Added : ஜூன் 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
லண்டன்: பிரிட்டனில், 'ஜீரோ கார்பன்' திட்ட விருதுக்கு தேர்வான, 50 பெண் இன்ஜினியர்கள் பட்டி யலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2020ம் ஆண்டில், சிறப்பு செயல்பாட்டிற்கான விருது பெறும், 50 பெண் இன்ஜினியர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.'ஜீரோ கார்பன்' திட்டத்தில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை

லண்டன்: பிரிட்டனில், 'ஜீரோ கார்பன்' திட்ட விருதுக்கு தேர்வான, 50 பெண் இன்ஜினியர்கள் பட்டி யலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.



latest tamil news



ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2020ம் ஆண்டில், சிறப்பு செயல்பாட்டிற்கான விருது பெறும், 50 பெண் இன்ஜினியர்களின் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.'ஜீரோ கார்பன்' திட்டத்தில், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியோர், இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.


latest tamil news



இந்த பட்டியலில், பிரிட்டன் அணுசக்தி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, குல்ஹாம் அறிவியல் மையத்தின் இன்ஜினியர், சித்ரா சீனிவாசன் இடம் பிடித்து உள்ளார். இவருடன், போக்குவரத்து பிரிவில் ரிது கார்க், நில அதிர்வு துறையில் பர்னாலி கோஷ், காலநிலை மாற்ற நிபுணர் அனுஷா ஷா மற்றும் மூத்த இன்ஜினியர் குசும் திரிகா என, ஐந்து இந்திய வம்சாவளியினர் இடம் பெற்றுள்ளனர்.இதுகுறித்து, சித்ரா சீனிவாசன் கூறுகையில், ''இந்த சாதனை, மிகவும் ஊக்கமளிக்கிறது. என் சகாக்களின் ஆதரவு இல்லாமல், இது சாத்தியம் இல்லை,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
25-ஜூன்-202016:48:54 IST Report Abuse
Loganathaiyyan இந்தியர்கள் இந்திய வம்சாவளியினர் மலைக்கும் மடுவுக்கும் உள்ள சம்பந்தம்?எப்பொழுது அந்த நாட்டுக்கு சென்று அந்த நாட்டின் குடிமகன் என்று ஆனார்களோ இந்த நாட்டிலிருந்து அவர்கள் விலகிவிட்டார்கள் என்று அர்த்தம். இதை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். எங்கே ஒரே ஒரு கேள்வி??? Are you an Indian என்று கேளுங்கள் No I am a British Cirtizen என்று பதில் வரும்
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
25-ஜூன்-202016:47:12 IST Report Abuse
Loganathaiyyan இந்தியர்கள் இந்திய வம்சாவளியினர் மலைக்கும் மடுவுக்கும் உள்ள சம்பந்தம்?எப்பொழுது அந்த நாட்டுக்கு சென்று அந்த நாட்டின் குடிமகன் என்று ஆனார்களோ இந்த நாட்டிலிருந்து அவர்கள் விலகிவிட்டார்கள் என்று அர்த்தம். இதை இவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X