சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் மொபைல் போன்கடையடைப்பு போராட்டம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

விழுப்புரம் : சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, விழுப்புரத்தில் மொபைல் கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், 55; இவரது மகன் பென்னிக்ஸ், 31; இவர்கள் அங்குள்ள மெயின் பஜாரில் மொபைல் போன் கடை நடத்தி வந்தனர். இவர்கள் ஊரடங்கை மீறி சில தினங்களுக்கு முன் கடை திறந்ததால், சாத்தான்குளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த ஜெயராஜி, பென்னிக்ஸ் ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தனர். இருவர் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கோரி விழுப்புரத்தில் நேற்று மொபைல் கடை உரிமையாளர்கள் கடையடைப்பில் ஈடுபட்டனர்.

தங்களின் கடைகளின் முன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X