சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜூலை 7ம் தேதி வேலை நிறுத்தம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கடலுார் : பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை 7 ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட ரேஷன் கடை பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு, ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கடலுாரில் அளித்த பேட்டி:ரேஷன் கடை பணியாளர்களை மருத்துவ குழு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க மூன்று மாதமாக கோரிக்கை வைத்தும் அரசு ஏற்கவில்லை. இது வரை 16 ரேஷன் கடை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுரேஷ்குமார் என்பவர் இறந்துள்ளார். அவருக்கு உடனடியாக தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிவாரணம், குடும்பத்திற்கு வேலை வழங்க வேண்டும்.சரியான எடையில் பொருள்கள், 100 சதவீத கார்டுகளுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை.

ரேஷன் கடை பணியாளர்களின் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 17 முதல் 20ம் தேதி வரை மூன்று நாட்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்றியும் அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கையாக வரும் ஜூலை 7ம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் கூட்டுறவுத்துறை ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.சங்க மாநிலத் தலைவர் சரவணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X