சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றியதால் போக்குவரத்திற்கு தடை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த கோடங்குடியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் சாலையின் குறுக்கே மரத்தை போட்டு போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர்.

திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் 144 ஏக்கர் பரப்பளவில் ஊராட்சி ஏரி உள்ளது. இந்த ஏரியில் கோழியூர், கோடங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்தனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோடங்குடி ஏரி மராமத்து பணி துவங்கியது. போதிய நிதி இல்லாமல் நின்றிருந்த பணி தற்போது, கோடங்குடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் துவங்கியது.

இதனால் ஏரியை ஆக்கிரமித்து பயிரிட்ட ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், கோடங்குடியை சேர்ந்த பொது மக்கள் கோழியூர் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நேற்று மதியம் கோடங்குடியில் இருந்து கோழியூர் வழியாக திட்டக்குடி செல்லும் சாலையின் குறுக்கே மரங்களை போட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். தகவலறிந்த போலீசார் நேரில் சென்று மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X