சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி கவிழ்ந்து கிளீனர் பலி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து கிளீனர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 50. லாரி டிரைவர் .இவர் நேற்று அதிகாலை 4;30, மணிக்கு டி.என். 04-டி- 2936 என்ற லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு மன்சூராபாத் கிராமத்திலிருந்து எதப்பட்டு ஏரிக்கரை வழியாக வந்தார். அப்போது வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக வளைவில் கவிழ்ந்தது.இதில் கிளீனராக வந்த வ.நம்மியந்தலை சேர்ந்த குப்புராஜ் மகன் ராஜ்குமார், 27 , படுகாயமடைந்து அதேஇடத்தில் இறந்தார். டிரைவர் தலைமறைவானார்.இது குறித்து குப்புராஜ் புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X