சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள் வர இ-பாஸ் அவசியம்: கலெக்டர் அதிரடி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 448 ஆக உயர்ந்தது.

இதுகுறித்து கலெக்டர் கிரண் குராலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்கனவே 437 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 210 பேருக்கு பரிசோதனை செய்ததில், 21 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதில் 10 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால், மீதமுள்ள 11 பேரை சேர்த்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்தது.இதில் 325 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் இறந்தார்.மீதமுள்ள 122 பேரில், 51 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி உள்ளது. 71 பேருக்கு அறிகுறி இல்லை.மேலும் இன்று 25ம் தேதி முதல் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தாலும் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும்.

இ-பாஸ் உள்ளவர்கள் மட்டுமே கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X