சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிசோதனை முடிவு வெளியீடு ; அச்சமடைந்த போலீசார்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்த 27 போலீசாருக்கும் தொற்று இல்லை என முடிவு வெளியானதால் நிம்மதி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமைக் காவலர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவருடன் பணிபுரிந்த சக போலீசார் அச்சமடைந்தனர். இதையொட்டி முதல் கட்ட நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசாரின் உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அதன் முடிவுகள் நேற்று வெளியானது.அதில், 27 போலீசாருக்கும் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதனால் கடும் அச்சத்தில் இருந்த போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இரண்டாம் கட்டமாக பரிசோதனை மேற்கொண்ட போலீசார் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X