பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் நிவாரண நிதி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என கலெக்டர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:தமிழகத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1,000 ரூபாய் நிவாரண தொகையை அவர்களது வீட்டிற்கு சென்று வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளி களுக்கு வரும் 29ம் தேதி முதல் வி.ஏ.ஓ., மூலம் நிவாரண தொகை வழங்கப்படும்.விநியோக படிவம் பூர்த்தி செய்ய தேவையான விபரங்களை மாற்றுத் திறனாளிகள் அளிக்க வேண்டும். தேசிய அடையாள அட்டையின் மொத்த பக்கங்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலினை தயார் நிலையில் வைத்திருந்து நிவாரண தொகை வழங்கும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவர், நிவாரண தொகை வழங்கியதற்கான விபரத்தினை, தேசிய அடையாள அட்டையுடன் கூடிய பதிவு புத்தகத்தில், 'கோவிட் - 19 நிவாரண தொகை 1,000 ரூபாய் வழங்கப்பட்டது' என முத்திரையிட்டு கையொப்பம் இடுவார்.நிவாரண தொகை பெறுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் 04146 225543, 94999 33561, 63801 37002, 63808 03301 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அல்லது மாநில மைய எண் 18004250111 தொடர்பு கொள்ளலாம்.நிவாரண தொகையினை மாற்றுத் திறனாளிகள், அவர்களின் பெற்றோர் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலர்களிடம் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X