வெளியூர்களில் இருந்து 25 பேர் சங்கராபுரம் வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூர்களில் இருந்து 25 பேர் சங்கராபுரம் வருகை

Added : ஜூன் 25, 2020
Share

சங்கராபுரம் : வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையிலிருந்து 25 பேர் நேற்று சங்கராபுரம் வந்தனர்.

சங்கராபுரம் சுற்றுப் பகுதிகளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் டில்லி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்த அவர்கள் ரயில் முலம் சென்னை வந்தனர். பின்னர்வேன் முலம் நேற்று சங்கராபுரம் வந்த அவர்களை தாசில்தார் நடராஜன் வரவேற்று சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள தனிமை முகாமில் தங்க வைத்தார்.மேலும், சென்னையிலிருந்து திரும்பிய 10 பேர் சங்கராபுரம் ராமகிருஷ்ணா கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, டாக்டர் சம்பத்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர்,கொரோனா தொற்று உள்ளதா என மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X