பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலத்தில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

சின்னசேலம் : சின்னசேலம் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மதியம் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எரவார், மேலுார், பெரிய சிறுவத்துார், நைனார்பாளையம், கனியாமூர், தகரை ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X