பந்தல் அலங்கார கடையில் தீரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பந்தல் அலங்கார கடையில் தீரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

Added : ஜூன் 25, 2020
Share
உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டை அருகே பந்தல் அலங்கார கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. எலவனாசூர்கோட்டை, நம்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 44; இவர், இங்குள்ள ஆசனுார் சாலையில் ஷாமியானா பந்தல், விசேஷங்களுக்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்துள்ளார்.நேற்று மதியம் 2:00 மணிக்கு வழக்கம்

உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டை அருகே பந்தல் அலங்கார கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

எலவனாசூர்கோட்டை, நம்பிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 44; இவர், இங்குள்ள ஆசனுார் சாலையில் ஷாமியானா பந்தல், விசேஷங்களுக்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்துள்ளார்.நேற்று மதியம் 2:00 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றார். மாலை 4:00 மணிக்கு கடையின் கூரை மேல் செல்லும் மின்கம்பியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த தீயில், ஷாமியானா மற்றும் அலங்கார பொருட்கள், பாத்திரங்கள் உட்பட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X