பொது செய்தி

தமிழ்நாடு

தேங்கி நிற்கும் கழிவு நீர் பொதுமக்கள் கடும் அவதி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : அண்ணா நகர் - தென்கீரனுார் சாலையில், மழை நீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

கள்ளக்குறிச்சி, அண்ணா நகர் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏமப்பேர் ஏரியில் கலக்கும் வகையில் அண்ணா நகர்- தென்கீரனுார் சாலையில் இருபுறங்களிலும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் துார்ந்து புதர்கள் மண்டியுள்ளன. இதனால், கால்வாயில் கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இவ்வழியாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவு நீர் கால்வாயை சீரமைக்ககோரி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று மதியம் 2:30 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் குளம்போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது. எனவே, அண்ணா நகர் பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கழிவு நீர் கால்வாயை துார்வாரி சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X