இரவு நேரங்களில் மணல் கொள்ளை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவு நேரங்களில் மணல் கொள்ளை

Added : ஜூன் 25, 2020
Share
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூங்கில்துறைப்பட்டு, பொருவளூர், பொரசப்பட்டு, சுத்தமலை, ஆற்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் பெண்ணையாற்றில் இரவு நேரங்களில் டிப்பர் மற்றும் பைக்குகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகிறது.

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு, பொருவளூர், பொரசப்பட்டு, சுத்தமலை, ஆற்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் பெண்ணையாற்றில் இரவு நேரங்களில் டிப்பர் மற்றும் பைக்குகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகிறது. இதனால் ஆற்றில் பல்வேறு இடங்கள் தற்போது கட்டாந்தரையாக காணப்படுகிறது.போலீசார் தனிப்படை அமைத்து மணல் கொள்ளையைத் தடுத்தாலும் காவல் துறையில் பணிபுரியும் ஒரு சிலர் ஆசியுடன் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணல் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் அந்த இடத்திற்குச் செல்லும்முன் மணல் கடத்தல்காரர்களுக்கு தகவல் சென்றுவிட அவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.


தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, மணல் கொள்ளையை தடுக்க போலீஸ் உயரதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X