பொது செய்தி

தமிழ்நாடு

நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசிப்போர் பரிசோதனை செய்ய கலெக்டர் அழைப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால், மந்தைவெளியில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள, காய்ச்சல் பிரிவு நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து கலெக்டர் கிரண்குராலா செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி நகராட்சியில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ள 16 முதல் 19வது வார்டுகள் வரை ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வீடு வீடாகச் சென்று கொரோனா அறிகுறிகள் அறிதல் மற்றும் தொடர்பில் உள்ளவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நான்கு வார்டுகளிலும் ரேஷன் பணியாளர்கள் அந்தந்த வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கவும், காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறை சார்பில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால், மந்தைவெளியில் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள, காய்ச்சல் பிரிவு நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X