பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம்

Added : ஜூன் 25, 2020
Share

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச பாட புத்தங்கள் மற்றும் சீருடைகளை பள்ளி தலைமையாசியர் களிடம் வழங்கும் பணி நேற்று துவங்கியது.

உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என 50 பள்ளிகள் உள்ளன. 31 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.கொரோனா தொற்று பரவலை யொட்டி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த சூழலில், உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம் மற்றும் சீருடைகள் அனைத்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் கொண்டு வரப்பட்டு, உளுந்துார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை உளுந்துார்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்களிடம் விநியோகம் செய்யும் பணி நேற்று துவங்கியது. இந்த பணிகளை, உளுந்துார்பேட்டை கல்வி மாவட்ட அலுவலர் மணிமொழி துவக்கி வைத்தார்.இலவச பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் வரும் 30ம் தேதி வரை அரசு பணி நாட்களில், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விநியோகம் செய்யப்படும். பள்ளிகள் திறக்கும் தேதியை அரசு அறிவித்த பின்னர், மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X