பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார சீர்கேட்டில் தற்காலிக உழவர் சந்தை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தற்காலிக உழவர் சந்தையான, அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் அழுகிய காய்கறிகளை அப்படியே விட்டுச் செல்வதாலும், கிருமி நாசினி தெளிக்கப்படாததாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உழவர் சந்தை் மூடப்பட்டு, பஸ் நிலையத்தில் இயங்கியது. சில நாட்கள் இயங்கி வந்த நிலையில், பஸ்கள் ஓடத் துவங்கியதால், உழவர் சந்தை அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு மாற்றப்பட்டது.பின்னர், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கான ஏற்பாடு செய்ததால், சி.எம்.எஸ்., வளாகத்திற்கு மாற்றப்பட்டது. பொதுத் தேர்வு ரத்தானதையடுத்து மீண்டும் பள்ளி வளாகத்தில் மாற்றியமைத்தனர். அதிகாலை 5:00 மணி முதல் காலை 9:00 மணி வரை உழவர் சந்தை இயங்குகிறது.

இங்கு, கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டதால், உழவர் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய நிலையில், உழவர் சந்தை முடிந்தவுடன் கிருமி நாசினி தெளிப்பு, சுத்தம் செய்தல் போன்ற எவ்வித பணிகளையும் உழவர் சந்தை நிர்வாகம் மேற்கொள்வதில்லை.மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் கடைக்கு முன்பாக நாள்தோறும் வட்ட குறியீடும் அமைப்பது இல்லை.

அதுமட்டுமின்றி வியாபாரிகள் அப்படியே விட்டுச் செல்லும் அழுகிய காய்கறிகள் உள்ளிட்ட குப்பைகள் கூட அகற்றப்படுவதில்லை. இதனால், உழவர் சந்தை முடிந்தவுடன் பள்ளி மைதானம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. எனவே, உழவர் சந்தை நேரம் முடிந்ததும், நாள்தோறும் பள்ளி வளாகத்தில் முழுமையான துாய்மை பணி மேற்கொள்ள கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X