மாம்பாக்கம் கூட்ரோட்டில் தொடரும் விபத்துகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாம்பாக்கம் கூட்ரோட்டில் தொடரும் விபத்துகள்

Added : ஜூன் 25, 2020
Share
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மாம்பாக்கம் கூட்ரோடில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். உளுந்துார்பேட்டை அடுத்த மாம்பாக்கம் கூட்ரோட்டைக் கடந்து ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. மேலும், கூட்ரோடு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால், குடிபிரியர்களும் அப்பகுதியில் அதிகளவில்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மாம்பாக்கம் கூட்ரோடில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த மாம்பாக்கம் கூட்ரோட்டைக் கடந்து ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. மேலும், கூட்ரோடு அருகே டாஸ்மாக் கடை இருப்பதால், குடிபிரியர்களும் அப்பகுதியில் அதிகளவில் காணப்படுவர்.இந்த கூட்ரோட்டில் இருந்து செம்மணங்கூர் மற்றும் மாம்பாக்கம் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் பிரிகின்றன. இதனால், இரு கிராமங்களில் இருந்து நடந்தும், இருசக்கர வாகனங்களில் வருவோரும் அதிகளவில் கூட்ரோட்டைக் கடந்து செல்கின்றனர்.

அவ்வாறு செல்லும்போது, உளுந்துார்பேட்டை நோக்கிச் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை நீடிக்கிறது. இது மட்டுமின்றி, குடிபிரியர்கள் பலர் மதுபோதையில் கூட்ரோட்டை தாறுமாறாக கடந்து செல்லும் போது, பைக் ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.கூட்ரோட்டில் சாலை போக்குவரத்து விதிகளின் படி, பேரிகார்டுகளோ, இரவில் ஒளிரும் ரிப்ளெக்டரோ அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது.எனவே, இந்த கூட்ரோட்டில் பேரிகார்டு வைத்து ரிப்ளெக்டர் மற்றும் அப்பகுதியில் ைஹமாஸ் விளக்கு அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X