பொது செய்தி

தமிழ்நாடு

10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி தீவிரம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் கல்வி மாவட்ட அளவில் 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் சிறப்பு மதிப்பீட்டு மையத்தில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் 42 உயர்நிலைப் பள்ளிகளும், 49 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 தேர்வு நிறைவடையும் தருவாயில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு பாதிக்கப்பட்டது. இச்சூழலில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. என்றாலும் மாணவர்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் வகையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டின்படி மதிப்பெண் அல்லது கிரேடு வழங்கி மாணவர்களின் தேர்வு முடிவை அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக திருக்கோவிலுார் கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் சிறப்பு மதிப்பீட்டு மையம் திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.பத்தாம் வகுப்பில் 8,429 மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில் 6,611 மாணவர்களின் மதிப்பெண் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக அவர்கள் ஏற்கனவே பள்ளியில் தேர்வு எழுதிய காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள், வருகைப்பதிவேடு, ரேங்க் கார்டு (முன்னேற்ற பதிவேடு) ஆகியவற்றுடன் நேரில் ஆஜராக தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலுார் கல்வி மாவட்ட அலுவலர் சுப்ரமணியன் தலைமையில், பிளஸ் 1 விடைத்தாள் ஆய்வு மைய பணியை வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சோழபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமர் ஆகியோர் மேற்பார்வையில், துணை ஆய்வாளர் பிரபாகரன் முன்னிலையில் மதிப்பெண் நிர்ணயம் செய்யும் பணி நடத்து வருகிறது.மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மவுலானா, கண்காணிப்பாளர்கள் பிரபாகர், முருகானந்தம் இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகின்றனர்.

சாரண, சாரணிய இயக்கம் ஆசிரியர்கள், பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான முகக் கவசம், கையுறை, சனிடைசர் உள்ளிட்டவைகளை வழங்கி மைய துாய்மைப் பணியை மேற்கொண்டுள்ளனர். இப்பணி வரும் 30ம் தேதி வரை நடைபெறும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X