இந்தியா

மதிப்பெண் பட்டியல் பணி காரைக்கால் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணியை கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆய்வு செய்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2019 - 2020ம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு பொதத் தேர்வு மற்றும் பதினொன்றாம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதையடுத்து அரசாணைப்படி, மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு பணி துவங்கி உள்ளது. தேர்வு எழுத பதிவு செய்த மாணவர்களுக்கு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 80 சதவீத மதிப்பெண், வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 23 மேல்நிலைப் பள்ளிகள், 62 உயர்நிலைப் பள்ளி மாணவர் களின் மதிப்பெண் தயார் செய்யும் பணி, அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது. ஜூன் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து பள்ளியின் விடைத்தாள்கள் பெறும் பணியும், 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மதிப்பெண் சரிபார்க்கும் பணியும் நடைபெற உள்ளது.இப்பணிகள் பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில், மாவட்ட கல்வி அதிகாரி அல்லி, பள்ளி துணை முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று முன்தினம் கலெக்டர் அர்ஜுன் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X