பைக் விபத்தில் வாலிபர் பலி| Dinamalar

இந்தியா

பைக் விபத்தில் வாலிபர் பலி

Added : ஜூன் 25, 2020
Share

பாகூர் : பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் 15வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் ஆனந்த், 27; இவர் கடந்த 21ம் தேதி பாகூரில், நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.பாகூர் - வில்லியனுார் சாலையில் அரங்கனுார் என்ற இடத்தில் சென்ற போது, சாலையில் இருந்த வேகத்தடையின் மீது பைக் ஏறியது. அப்போது, நிலை தடுமாறிய ஆனந்த் கீழே விழுந்துள்ளார். இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X