இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அரசு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல், காங்., அரசு விழிபிதுங்கி நிற்கிறது' என. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வையாபுரிமணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை.புதுச்சேரி அரசு கொரோனாவை எவ்வாறு கையாள்வது என தெரியாமல், விழிபிதுங்கி நிற்கிறது. மதியம் 2.௦௦ மணி முதல் ஊரடங்கு அறிவித்து விட்டு, ஓட்டல்களில் இரவு 8.௦௦ மணி வரை பார்சல் வாங்கி செல்ல அனுமதித்துள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறையுமா.தொழிற்சாலைகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என கண்காணிக்காததால், மேட்டுப்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை மூலம் ஒரு கிராமமே பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வேகமாக பரவ, அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம். ஊரடங்கின்போது வழங்கிய 2 ஆயிரம் பணத்தை வைத்து, 3 மாதங்கள் பசி, பட்டினியின்றி வாழ முடியுமா. மஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கவில்லை.தமிழகத்தை போல் மளிகை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா விவகாரத்தில் காங்., அரசு செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளது.ஊரடங்கால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.

முத்தியால்பேட்டை கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள குடும்பத்தினருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.புதுச்சேரியில் 3 மாதத்திற்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் ஆய்வுசெய்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X