இந்தியா

மதுபான ஆலையில் வரி ஏய்ப்பு: சி.பி.ஐ., விசாரிக்க பா.ஜ., கோரிக்கை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'மதுபான ஆலையில் வரி ஏய்ப்பு குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:புதுச்சேரியில் இரண்டு மதுபான ஆலைகள், மதுபாட்டில்களில் கலால் அரசு முத்திரை மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அரசு அல்லது அரசியல்வாதிகள் துணையின்றி இத்தனை பெரிய வரி ஏய்ப்பு நடைபெற சாத்தியமில்லை.ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, குப்பை வரி விதித்து, அதைக் கட்ட தாமதமானால் அபராதம் வசூலிக்கும் புதுச்சேரி அரசு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஏமாற்றிய தொழிலதிபர்களை ஏன் கைது செய்யவில்லை. அரசு அவர்களை பாதுகாக்கிறதா.

வரி ஏய்ப்பு குறித்த விசாரணையை சி.பி.ஐ., ஏற்று நடத்த வேண்டும். வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும்.மாநில அரசின் வருமானத்தை கோட்டைவிட்டு, மக்கள் மீது வரிச்சுமையை கூட்டி, மத்திய அரசை குறைகூறும் மிகவும் பலவீனமான ஆட்சியை நடத்துகிறார், முதல்வர் நாராயணசாமி.புதுச்சேரி கவர்னர் குளம், குட்டை, கால்வாய்களை மட்டும் துார் வாரி கொண்டிருக்காமல், மாநிலத்தில் ஊழல்களையும் துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். ஆட்சியில் உள்ள அமைச்சர்களின் கடந்த ஐந்து ஆண்டுகால சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்.

வரும் 2021ல் நடைபெறும் தேர்தலில், ஊழலுக்கு இடம் கொடுக்காமல், உன்னத ஆட்சி நடத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியை புதுச்சேரி மாநிலத்திற்கு மக்கள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X