மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி| Dinamalar

இந்தியா

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Added : ஜூன் 25, 2020
Share

புதுச்சேரி : கட்டுமான பணியின்போது, 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
மதகடிப்பட்டு அடுத்த தமிழக பகுதியான கெங்கராம்பாளையத்தை சேர்ந்தவர் பாலக்கிருஷ்ணன் மகன் சிவக்குமார், 32; கட்டடத் தொழிலாளி. நேற்று முன்தினம், முதலியார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கட்டட சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். மாலை 4:00 மணியளவில், 3வது மாடியில் இருந்து கால் தவறி சிவக்குமார் கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக, முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். கட்டுமான பணியின்போது, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், அஜாக்கிரதையாக பணி மேற்கொண்டதாக, சென்ட்ரிங் ஒப்பந்ததாரர் தவளக்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X