இந்தியா

முக கவசம் வழங்கி, அபராதம் வசூலிக்க அ.ம.மு.க., செயலாளர் வலியுறுத்தல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'முக கவசம் அணியாதவர்களிடம் 'என்-95' வகை முக கவசம் வழங்கி, அபராத தொகை பெற்றுக் கொள்ள வேண்டும்' என அ.ம.மு.க., வலியுறுத்தி உள்ளது.

அ.ம.மு.க., புதுச்சேரி மாநில செயலாளர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் அதிகமாக பரவி வரும் கொேரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, மீண்டும் ஊரடங்கை கடுமையாக்கி, நேர கட்டுப்பாடுகளை விதித்திருப்பது நல்ல முடிவாகும். அதே சமயத்தில், பல மாதங்களாக ஊரடங்கினால் வேலை மற்றும் வருமானம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், முக கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தி அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் 'என்-95' வகை முக கவசம் வழங்கி, அபராத தொகை பெற்றுக் கொள்ள வேண்டும்.இதன் மூலம், ஒரு நபர் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் அபராதம் செலுத்துவதை தவிர்க்க முடியும். கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும்.மத்திய அரசின் வழிகாட்டுதலை மீறி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மாதாந்திர தவணை தொகையை கட்டுமாறு வலியுறுத்தி வருகின்றன. அத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X