மீன்பிடி தடைக்கால நிவாரணம் | Dinamalar

இந்தியா

மீன்பிடி தடைக்கால நிவாரணம்

Added : ஜூன் 25, 2020
Share

புதுச்சேரி : கடந்தாண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெற்ற அனைவருக்கும் இந்தாண்டும் நிவாரணம் வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் முதல்வர் நாராயணசாமி, மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரிடம் அளித்துள்ள மனு:புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், 23 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி தடைக்கால உதவி பெற்று வந்தனர். இந்நிலையில், அரசு ஊழியர் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு 19 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை அரசு வழங்கியது.கடந்த ஆண்டு தடைக்கால நிவாரண உதவி பெற்றவர்களில் மீனவ முதியோர் உதவித்தொகை பெறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு தடைக்கால நிவாரண உதவி வழங்கக் கூடாது என கவர்னர் உத்தரவிட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் கூறி வருகிறார்.

கொரோனா பரவி வரும் தற்போதைய நிலையில், தடைக்கால நிவாரண நிதி இல்லை என கூறுவது மனிதாபிமானமற்ற செயலாக உள்ளது.தமிழகத்தில் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து அதற்கான டோக்கன் வைத்துள்ளவர்களை தனி குடும்பமாக கருதி, மீன்பிடி தடைக்கால நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக அரசும், கவர்னரும் முரண்பாடான கருத்து கொண்டிருப்பதால், உடனடியாக அமைச்சரவையை கூட்ட வேண்டும். அதில், கடந்த ஆண்டு தடைக்கால நிவாரண உதவி பெற்ற அனைவருக்கும் இந்த ஆண்டும் நிவாரண உதவி வழங்கப்படும் என முடிவு செய்து, கவர்னருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X