நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆர்சனிக் ஆல்பம்-30 மாத்திரை| Dinamalar

இந்தியா

நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆர்சனிக் ஆல்பம்-30 மாத்திரை

Added : ஜூன் 25, 2020
Share

வில்லியனுார் : வில்லியனுார் தொகுதியில், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம்-30 மாத்திரைகளை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனரகம் சார்பில், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக 'ஆர்சனிக் ஆல்பம் 30' மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி, வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது. வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் குணசேகரன் தலைமை தாங்கினார் ஹோமியோபதி டாக்டர் முத்துலட்சுமி வரவேற்று, ஆர்சானிக் ஆல்பம்-30 மாத்திரைகளால் ஏற்படும் நன்மைகள், பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கினார்.பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு ஆர்சனிக் ஆல்பம்-30 மாத்திரைகளை, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

வில்லியனுார் தொகுதி முழுவதும் பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம்-30 மாத்திரைகளை வழங்க ஏதுவாக, அமைச்சர் நமச்சிவாயம், 25 ஆயிரம் ரூபாயை ஹோமியோபதி துறையிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில் எஸ்.பி., ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் குமார், காங்., பிரமுகர்கள் கண்ணபிரான், ஏகாம்பரம், விஸ்வநாதன், தேவராசு, இளைஞர் காங்., மாநில தலைவர் ரமேஷ், தெற்கு மாவட்ட பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X