இந்தியா

கொரோனா தொற்று அச்சமின்றி சாலைகளில் மக்கள் கூட்டம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா அச்சம் இன்றி, மக்கள் வாகனங்களில் சுற்றித் திரிவதால், தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் துவங்கிய மார்ச் மாதத்தில் ஊரடங்கு காலத்தில், கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தது.பொது மக்களும் கொரோனாவுக்கு அஞ்சி, கட்டுப்பாடுகளை பின்பற்றினர். ஆரம்பத்தில் ஒன்று, இரண்டு என இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது, 450ஐ தாண்டிவிட்டது.இந்நிலையில், ஊரடங்கில் மீண்டும் சில கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடைகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக உள்ளனர்.

நகரில் பாரதி வீதி, நேரு வீதி், அண்ணா சாலை, காமராஜர் சாலை என பிரதான சாலைகளில் உள்ள கடைகளில் மக்கள் கும்பல் கும்பலாக நின்று பொருட்கள் வாங்குகின்றனர். பலர் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வீதிகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் நகர வீதிகளில் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கிராமப்புற பகுதிகளிலும் 30 சதவீதம் பேர் முக கவசம் அணியாமல் சாலைகளில் திரிகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாய நிலை உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X