தினமும் 100 ேபர் பாதிக்கப்படும் அபாயம் கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை| Dinamalar

இந்தியா

தினமும் 100 ேபர் பாதிக்கப்படும் அபாயம் கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை

Added : ஜூன் 25, 2020
Share

புதுச்சேரி : 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை' என, கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அவரது பதிவு:புதுச்சேரியில் கொரோனா தொற்றால் புதிதாக 58 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்று பாதிப்புகளை அதிகரிக்க அனுமதித்தால், ஒரு நாளைக்கு புதிதாக 100 நபர்கள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், தடுக்கவும், நமது ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் உழைக்க வேண்டும். பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.அனைவரும் வெளியே செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும்.

கடைக்கு செல்லும்போது சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும். வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும். இவற்றை பின்பற்றும்போது நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது அழுக்கு படிந்த காலணிகளை வீட்டிற்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்களை சமூக இடைவெளியுடன் பணிபுரிய செய்வது, கிருமி நாசினிகளை போதுமான அளவு வைத்திருப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, கவர்னர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X