பொது செய்தி

தமிழ்நாடு

அரசின் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை ஒப்படைப்பு

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில், 350 ஏக்கர் பரப்பில், டாக்டர் கே.எம்.செரியனின், பிரன்டியர் மருத்துவ அறிவியல் பூங்கா, கொரோனா சிகிச்சைக்காக, சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டு வரும் அப்பகுதி மக்களுக்கு உதவும் நோக்கில், மேற்கண்ட மருத்துவ அறிவியல் பூங்கா, மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.இயற்கையான சூழலில், 150 படுக்கை வசதிகளுடன், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சுவாச கருவிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், மல்டி சேனல் இ.சி.ஜி., கருவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மருத்துவமனையை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்புதல் கடிதத்தை, தமிழக சுகாதாரத் துறைக்கு, மருத்துவ அறிவியல் பூங்கா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, விரைவில் அந்த மருத்துவமனையை பயன்படுத்த இருப்பதாக, சுகாதாரத் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X